Sunday, March 2, 2014

எளிய பாட்டி வைத்தியம்

பித்தப் பை கல்

கரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும்.

பித்த வெடிப்பு

அகத்திக்கீரை, மருதாணி இலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கள் குணமாகும்.

புற்றுநோய்

கரிசலாங்கண்ணி கீரைச் சாறு (30 மிலி), பருப்புக் கீரை சாறு (30மிலி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய்கள் குணமாகும்.

புண்

பொடுதலைக் கீரையை அரைத்து, ஆசனவாய்க் கட்டிகள் மீது கட்டினால், அவை பழுத்து உடைந்து குணமாகும். மேலும் புண், அக்கிப்புண், நெறிக்கட்டி போன்றவற்றின் மீது பூசினால் குணம் பெறலாம்.

குழந்தைகளுக்கு வசம்பு

வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து குழந்தைகளுக்கு பொட்டாக இடுவதன் சிறப்பு என்ன? 

பொதுவாகவே தமிழ் சமூகத்தில்,தாய்மார் தம்முடைய குழந்தைகளுக்கு திருஸ்டி பொட்டு இடுவது வழக்கு.அதுவும்,வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து,இடுவது வழக்கம்.இதற்கான அறிவியல் விளக்கம் காண்போம்.

வசம்புக்கு பிள்ளைமருந்து என்ற வேறு பெயரும் உள்ளது.இது குறிப்பாக குழந்தைக்கு உண்டாகும் நோய்களுக்கு நல்லது மட்டுமல்லாது,குழந்தைகளின் நோய் எதிர்புசக்தியை அதிக்ரிக்க செய்கிறது.

மேலும், நரம்புசெல்களை செயல்படுத்தி,குழந்தையின் மூளையின் செயல் பாட்டை அதிகரிக்கும்.பேச்சு துவக்கத்திற்கு முக்கிய பங்கினையுமும் வகிக்கிறது.திக்குவாய் நோய்க்கு சிறப்பாக மருத்துவமாக கூறப்படுகிறது..

எனவேதான், வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து குழந்தைகளுக்கு பொட்டாக இடப்படுகிறது.

Friday, February 28, 2014

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,

தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக!

வாயுத் தொல்லை

வாயுத் தொல்லை! இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத்துல தர்ற பிரச்சினை இது.

ஒருத்தர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை வாயுவை வெளியேத்தறது சாதாரணமானதுன்னு சொல்றாங்க மருத்துவர்கள்.

இந்த வாயுத் தொல்லை ஏன் வருது?

உணவு செரிமானமாகி, வயித்துலேர்ந்து சிறுகுடலுக்குப் போகும். மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும். அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும். மிச்ச மீதி உணவோட, அந்த பாக்டீரியா சேர்ந்து, உணவு புளிச்சு, வாயுவா மாறுது. இந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா, அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறினு எடுத்துக்கலாம். அதை சாப்பாடு மூலமா சரி செய்யலாம்.

அதுக்கு முன்னாடி வாயுவை உற்பத்தி பண்ற உணவுகளைப் பத்திப் பார்க்கலாம். அளவுக்கதிகமாக வாயுவை உற்பத்தி செய்கிற உணவுகள், மிதமான வாயுவை உற்பத்தி பண்ற உணவுகள், குறைந்த வாயுவை வெளியேத்தற உணவுகள்னு மூணு வகை. முதல் வகைல பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், குட்டி முட்டைகோஸ், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், சோயா பீன்ஸ், டர்னிப், சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை. இரண்டாவது வகைல ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கத்தரிக்காய், செலரி மற்றும் பிரெட். கடைசி வகைல முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய், அரிசி.

வாயுத் தொல்லையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

சமைச்ச உணவு சாப்பிடறப்ப கூடவே பச்சைக் காய்கறி, பழங்களை சாப்பிடக் கூடாது. பழம், பச்சைக் காய்கறி சாப்பிட்டு, கொஞ்ச இடைவெளி விட்டு, அப்புறம் சமைச்ச உணவை எடுத்துக்கிறது நல்லது. காய்கறி, பழங்களில் நார்ச்சத்து அதிகம். அது சமைச்ச உணவோட சேர்ந்து சீக்கிரம் செரிச்சு, புளிச்சு, வாயுவை உண்டாக்கும்.

சில பேர் அவசரம் அவசரமா சாப்பாட்டை விழுங்குவாங்க, அப்ப காற்றையும் சேர்த்து விழுங்கறதும் வாயுவுக்கான காரணம். மலச்சிக்கல் இன்னொரு காரணம், தினம் காலை எழுந்ததும் மலம் கழிக்கிறதைப் பழக்கப்படுத்திக்கிறவங்களுக்கு வாயுத் தொல்லை குறைவு.

சாப்பிட்ட உடனேயே வாயு வெளியேறாது. 3 முதல் 5 மணி நேரத்துக்குப் பிறகுதான் வரும். வாயுவுக்கு எதிரா போராடுற குணம் கொண்ட உணவுகள் பூண்டு, இஞ்சி, சோம்பு, ஓமம். வாயு அதிகம்னு தெரிஞ்ச உணவுகள்ல இதையெல்லாம் சேர்த்து சமைக்கிறப்ப, பிரச்சினை குறையும்.

சுண்டல் சாப்பிட்டா வாயுப் பிரச்சினை வரும். சுண்டலுக்கான தானியத்தை ஊற வச்சிட்டு, அந்தத் தண்ணியை வடிச்சு, வேற தண்ணி மாத்தி, கொஞ்சம் இஞ்சி சேர்த்து பிரஷர் குக் செய்யலாம். இல்லைனா சுண்டலுக்கான கடலையை வெறும் கடாய்ல லேசா வறுத்துட்டு, இளம் சூடான தண்ணீர் விட்டு ஊற வச்சு, வடிச்சு வேக வச்சும் செய்யலாம். முக்கியமா அதோட மேல் தோல் உடையற அளவுக்கு வேக வைக்கணும்.

பழகாத எந்தப் புது உணவையும் ஒரே நாள்ல நிறைய சாப்பிடாம, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்றதும் நல்லது. பார்ட்டி, விசேஷம்னு முதல்நாள் நிறைய சாப்பிட்டவங்களுக்கு, அடுத்த நாள் வாயுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். பசியிருக்காது. அந்த நேரத்துல இஞ்சி முரபா, இஞ்சி சிரப், இஞ்சி சூரணம்னு எதையாவது எடுத்துக்கிறது உடனடி பலன் தரும்.

கிழங்கு சாப்பிட்டா முதுகு பிடிச்சிருச்சு, கடலை சாப்பிட்டா கை, கால் பிடிச்சிருச்சு, வாயுனு சொல்றவங்களை நிறைய பார்க்கலாம். உண்மைல வாயுங்கிறது வயித்துப்பகுதில மட்டும்தான் இருக்கும். முதுகுப் பிடிப்பு மாதிரி மத்த பிரச்சினைகளுக்கு காரணம் வேற ஏதாவது இருக்கலாம்.

நம் உடலை அறிவோம்

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.
மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

மனவளக்கலை - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

"மனவளக்கலை" வெறும் யோகம் மட்டும் இல்லை. "மனம் என்றால் என்ன?", மனதின் மகத்துவம் என்ன? மனமாக இருப்பது எது? எனத் தெரிந்து கொள்கிறோம். நாம் வாழ்ந்து வரும் மனித சமுதாயத்தைப் பற்றியும், அதற்கு நாம் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்கிறோம். நாம் எதனுடைய ஓர் அங்கமாக இருக்கிறோமோ அந்த இயற்கையைப் பற்றிய தெளிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்கிறோம். இயற்கையோ மாற்றப்பட முடியாதது. அதனை மனம் அறிந்து மதிக்கும் அளவில்தான் மனதிற்கு உயர்வு கிடைக்கும். மனம், உயிர், மெய்(Truth) என்ற மூன்று மறைபொருட்களைப் பற்றி தெரிந்துகொள்கிறோம். இது போதனை முறை மாத்திரம் அல்ல. இது மனதை பண்படுத்தி பக்குவப்படுத்தும் "சாதனை" முறை. தனி மனிதன் இந்த ஆன்மீக நெறியில் பண்பாட்டால், அது குடும்ப வாழ்வை வளப்படுத்தும். நல்ல குழந்தைகள் உற்பத்தியாகும். வளரும் சமுதாயம் வளமும் அமைதியும் பெறும். உலகமும் நலமுறும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Friday, February 21, 2014

மாதுளம் பழம்

மாதுளையில் ( Pomegranate) இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.

இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் வாந்தி, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தாகம், அதிதாகம், பித்தம், பித்தசுரம், மலட்டுத்தன்மை, உமிழ் நீர் அதிகச் சுரப்பு, விக்கல், மந்தம், செரியாமந்தம், அக்கினி மந்தம், பசியின்மை, ருசியின்மை, பேதி, நெஞ்செரிச்சல், காதடைப்பு, மயக்கம், தீராத மயக்கம் ஆகிய அனைத்தும் நீங்கும் என்கிறது பதார்த்த குணபாடம் என்னும் பழந் தமிழர் நூல்.